அம்னோவின் ஆதரவுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் அரச மன்னிப்பை ஆதரிக்குமானால் அக்கூட்டணி தனது செல்வாக்கை இழக்கக்கூடும் என்று பி.கே.ஆர். கட்சியின் பாசீர் கூடாங் எம்.பி. ஹசான் அப்துல் கரிம் எச்சரித்துள்ளார்.
தற்போது 12 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நஜீப், அரச மன்னிப்பு மூலம் விடுதலையாகுவதைப் பெரும்பாலான மக்கள் எதிர்க்கின்றனர் என்பதை அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன.
இந்நிலையில் அம்னோவுடன் ஒரே வாகனத்தில் பயணிக்கும் பக்காத்தான் ஹராப்பான், நஜீப்பின் அரச மன்னிப்பை ஆதரிக்கும் அதேவேளையில், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்யப்படும் நிலை ஏற்படுமானால் அந்தக் கூட்டணியின் செல்வாக்கு சரியலாம் என்று ஒரு சட்ட வல்லுநரான ஹசான் அப்துல் கரிம் நினைவுறுத்தினார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


