பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அரசாங்க சார்பற்ற அமைப்பு ஒன்றுக்கு ஆதரவு அளித்த வருவதாக கூறப்படும் குண்டர் கும்பல்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ காவ் கோக் சீன் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட குண்டர் கும்பர்களின் பெயர் பட்டியல், அவற்றின் நடவடிக்கைகள் மற்றும் அவை எங்கிருந்து செயல்படுகின்றன என்பதை மாநில போலீசார் அணுக்கமாக கண்காணித்து வருவதாக டத்தோ காவ் குறிப்பிட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசாங்க சார்பற்ற அமைப்பு என்ற முத்திரையுடன் அந்த குண்டர் கும்பல்கள் களத்தில் இறங்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த கும்பர்களின் மோசமான செயல்பாட்டை போலீசார் கண்டறிந்துள்ளனர் என்று டத்தோ காவ் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


