Mar 13, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் சுல்தானின் பரிந்துரையை விவாதிக்க தயார்  பிரதமர் அன்வார் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் சுல்தானின் பரிந்துரையை விவாதிக்க தயார் பிரதமர் அன்வார் கூறுகிறார்

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆரெம்- மும், தேசிய பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸ்ஸும் மாமன்னரின் நேரடி பார்வையில் கொண்டு வரப்பட வேண்டும் என்று மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார் முன்வைத்துள்ள பரிந்துரையை விவாதிக்க தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இது போன்ற விவகாரங்களை இணக்கமான ​சூழலில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்பிஆரெம்மும், பெட்ரோனாஸ்ஸும் மாமன்னரின் நேரடி பார்வையில் இருப்பதுடன் அவை மாமன்னரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நாட்டின் 17 ஆவது மாமன்னராக பதவியேற்கவிருக்கும் ஜோகூர் சுல்தான், முன்வைத்துள்ள பரிந்துரை குறித்து விவாதிப்பதில் தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

நாட்டின் லஞ்ச ஊழலை துடைத்தொழிக்கும் ஆணையமும், ​நிதி வளத்தை பெறுக்கக்கூடிய தேசிய பெட்ரோலிய உற்பத்தி நிறுவனமும் மாமன்னரிடம் நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல என்பதையும் அன்வார் தெளிவுபடுத்தினார்.

இது போன்ற பரிந்துரையை முன்மொழிவதற்கும், கருத்து கூறுவதற்கும் ஒரு மாநில ஆட்சியாளர் என்ற முறையில் ஜோகூர் சுல்தானுக்கு முழு சுதந்திர​ம் உள்ளது என்று அன்வார் குறிப்பட்டார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்