Sep 20, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் தாயைக் காப்பாற்ற முயன்ற மகன் – இரும்புக் கம்பிகள் தடையாக இருந்ததால் சோகம்
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் தாயைக் காப்பாற்ற முயன்ற மகன் – இரும்புக் கம்பிகள் தடையாக இருந்ததால் சோகம்

Share:

ஈப்போ, தாமான் டேசா தம்பூன் பகுதியில் இன்று அதிகாலை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், இரும்புக் கம்பிகளுக்கு பின்னால் உதவிக்காக தவித்துக் கொண்டிருந்த தனது தாயை காப்பாற்ற 30 வயதான ராஜா முஹமட் ஷுக்ரி எவ்வளவோ போராடியும், கடைசியில் காப்பாற்ற முடியாமல் போன துயர சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து முஹமட் ஷுக்ரியின் மூத்த சகோதரர் ராஜா அஹ்மாட் கூறுகையில், வீட்டின் பால்கனியில் பொருத்தப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளுக்கிடையே தனது சகோதரர், தாயின் கையை பிடித்து வெளியே இழுக்க முயன்றதாகவும், ஆனால் அவரால் வெளியே கொண்டு வர முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்தில் அவர்களது பெற்றோரான 64 வயதான ஸைத்துன் முஹமட், 70 வயதான ராஜா அஹ்மாட் ராஜா அலி மற்றும் அவர்களது உறவினரான 18 வயது நிக் அப்துல்ரஹ்மான் அஸிமின் ஹாரித் ஹெலால் ஆகியோர் உயிரிழந்தனர்.

அதிகாலை 4 மணியளவில் உதவி கேட்டு தனது மருமகன் அலறிய சத்தத்தையும், கண்ணாடி உடையும் சத்தத்தையும் கேட்டதாகவும், வீட்டுக்குள் செல்ல முயன்ற போது தீயும் புகையும் அதிகமாக இருந்ததால் தன்னாலும் அண்டை வீட்டினராலும் அவர்களை மீட்க முடியவில்லை என்றும் ராஜா இக்வான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related News