Sep 20, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய அமைதிப் படையை ஏமனுக்கு அனுப்ப முடியாது - காலிட் நோர்டின் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

மலேசிய அமைதிப் படையை ஏமனுக்கு அனுப்ப முடியாது - காலிட் நோர்டின் திட்டவட்டம்

Share:

ஏனெனில் தற்போது போர் மற்றும் ஆயுத மோதல் நீடித்து வருவதால், மலேசிய அமைதிப் படைப் பிரிவான மால்பாட்டை (MALBATT) அங்கு அனுப்ப முடியாது என தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

பொதுவாக மால்பாட் படையினர் போர் முடிவடைந்த பின்னர், அமைதி ஒப்பந்தங்களை அமல்படுத்தவும் அமைதியை உறுதி செய்யவும் கூடிய பகுதிகளிலேயே பணியமர்த்தப்படுவதாக கோத்தா திங்கியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மௌலிடூர் ரசூல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காலிட், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைதிப் படையை எங்கு அனுப்புவது என்பது மலேசியாவின் தனிப்பட்ட முடிவு அல்ல என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் உத்தரவின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் லெபனானில் மலேசிய அமைதிப் படையினர், அமைதி ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மதிக்கப்படுவதை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், போர் முடிவடைந்து, சம்பந்தப்பட்ட தரப்புகள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு, ஐநா ஒப்புதல் வழங்கினால் மட்டுமே அமைதிப் படை அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என காலிட் தெரிவித்துள்ளார்.

Related News

மலேசிய அமைதிப் படையை ஏமனுக்கு அனுப்ப முடியாது - காலிட் நோ... | Thisaigal News