Sep 20, 2026
Thisaigal NewsYouTube
நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவு: எழுத்துப்பூர்வ அறிவிப்புக்காக சிறைத்துறை காத்திருப்பு
தற்போதைய செய்திகள்

நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவு: எழுத்துப்பூர்வ அறிவிப்புக்காக சிறைத்துறை காத்திருப்பு

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பின் அடிப்படையில், மீதமுள்ள சிறைத்தண்டனையை அவர் வீட்டுக் காவலில் அனுபவிப்பது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை என மலேசிய சிறைத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், மாமன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியத்தின் முடிவு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆவணங்கள் உரிய வழிமுறைகள் மூலம் தங்களுக்கு அனுப்பப்படும் வரை, அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எந்தவொரு அடுத்தகட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என சிறைத்துறை குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலும் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மன்னிப்பு வாரியத்திடம் இருந்து தங்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

அதேவேளையில், நஜிப் ரசாக்கின் தாமான் டூத்தா இல்லம் அவரை வீட்டுக் காவலில் வைப்பதற்கு ஏற்றதா? என்பது குறித்து கருத்து தெரிவிக்கவும் அவர் மறுத்துவிட்டார்.

மேலும், மன்னிப்பு வாரியம் ஏற்கனவே குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கியுள்ளதா? அல்லது இடத்தைத் தேர்வு செய்யும் பொறுப்பை சிறைத்துறையிடம் விட்டுள்ளதா? என்பதை முதலில் தங்கள் அமைச்சு தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவு: எழுத்துப்பூர்வ அறிவிப்ப... | Thisaigal News