Sep 20, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் கணவன், காதலரின் தாக்கத்தால் பெண்களிடம் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் கணவன், காதலரின் தாக்கத்தால் பெண்களிடம் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு

Share:

கிளந்தான் மாநிலத்தில் பெண்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதற்கு கணவர்கள் அல்லது காதலர்களின் தாக்கம் முக்கிய காரணமாக இருப்பதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமையான ஏஏடிகே தெரிவித்துள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு பெண்கள் தொடர்பான போதைப்பொருள் வழக்குகள் 598-ஆக அதிகரித்துள்ளதாக ஏஎடிகே குறிப்பிட்டுள்ளது.

குடும்பப் பிரச்சினைகள், கணவர்களால் ஏற்படும் மன அழுத்தம், புறக்கணிப்பு மற்றும் தனிமை போன்றவை பெண்களை போதைப்பொருள் பயன்படுத்தத் தூண்டுவதாக ஏஏடிகே தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜுசோ தெரிவித்துள்ளார்.

மேலும், சில பெண்கள் உடல் எடை குறைப்பு மற்றும் கூடுதல் ஆற்றலுக்காக போதைப்பொருள் உதவும் என நம்ப வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், கிளந்தானில் கடந்த ஆண்டு பெண்களிடையே அதிகம் பயன்படுத்தப்பட்ட போதைப்பொருள் அம்பெத்தாமின் வகை ஊக்க மருந்துகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்திய 557 பேரில், 19 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் 409 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News