Sep 19, 2026
Thisaigal NewsYouTube
பத்து ஆராங் கழிவெரியூட்டி ஆலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை: ரிங்கிட் 100,000 நிதி திரட்டும் இயக்கம்
தற்போதைய செய்திகள்

பத்து ஆராங் கழிவெரியூட்டி ஆலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை: ரிங்கிட் 100,000 நிதி திரட்டும் இயக்கம்

Share:

பத்து ஆராங், கழிவெரியூட்டி ஆலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரவாங் தோலாக் இன்சினெரேட்டர் நெட்வோர்க் அமைப்பு, சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதுடன், அதற்கான செலவுகளைச் சமாளிக்க ஒரு லட்சம் ரிங்கிட் நிதி திரட்டும் இயக்கத்தையும் தொடங்கியுள்ளது.

அமைப்பின் பேச்சாளர் அப்துல் ஹனான் அப்துல் மொக்தி கூறுகையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றம் தொடர்பாக சட்டரீதியான சவாலை எதிர்கொள்வதற்கான சட்ட ஆலோசனையைப் பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சட்ட நடவடிக்கையின் வடிவம் குறித்து ஆலோசனைக்குப் பின்னரே முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

பத்து ஆராங் பகுதியில் முன்மொழியப்பட்டுள்ள கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்தத் திட்டத்திற்கு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கவலைகளை முன்வைத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Related News