Sep 19, 2026
Thisaigal NewsYouTube
தம்பினில் வீடு தீப்பிடித்ததில் 63 வயது முதியவர் பலி
தற்போதைய செய்திகள்

தம்பினில் வீடு தீப்பிடித்ததில் 63 வயது முதியவர் பலி

Share:

நெகிரி செம்பிலான், தம்பின், தாமான் இந்தாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், மாடி வீடு ஒன்றின் அறையில் சிக்கிய 63 வயது முதியவர் உயிரிழந்தார்.

காலை சுமார் 6.15 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்ட் அமிருடின் சரிமான் தெரிவித்தார்.

மூன்று பேர் வசித்து வந்த அந்த வீட்டில், உயிரிழந்தவரின் 56 வயது மனைவியும் 27 வயது மகனும் தீயில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினர்.

வீட்டின் பின்பகுதியில் சுமார் 30 விழுக்காடு தீயில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதுடன், குற்றச் செயல் தொடர்பான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை.

உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தம்பின் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

Related News

தம்பினில் வீடு தீப்பிடித்ததில் 63 வயது முதியவர் பலி | Thisaigal News