Sep 19, 2026
Thisaigal NewsYouTube
ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாகப் புகார்: புக்கிட் அமான் விசாரணை
தற்போதைய செய்திகள்

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாகப் புகார்: புக்கிட் அமான் விசாரணை

Share:

ருக்குன் நெகாராவை கேலி செய்வதாகவும், இன உணர்வுகளைத் தூண்டும் வகையிலான கருத்துகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படும் நாடகக் காட்சியின் காணொளி தொடர்பான விசாரணையை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவு மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று இரவு 8.30 மணியளவில் ஜாலான் துன் ரசாக் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலஸ் தலைவர் ஃபாடில் மார்சூஸ் தெரிவித்தார்.

பத்து நிமிட காணொளியில் ஐந்து நடிகர்கள் ருக்குன் நெகாராவின் ஒவ்வொரு கொள்கையையும் கூறுவதுடன், இன உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய கருத்துகளும் இடம் பெற்றுள்ளதாக போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

இந்தக் காணொளியின் உள்ளடக்கம் பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி, சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடும் என ஆரம்பக் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த நாடகம் 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்டதாகவும், அண்மைய மலேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு மீண்டும் பதிவேற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

Related News