மலாக்கா, அலோர் காஜாவில் உள்ள தாமான் இனாங் சாரி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆடவர் ஒருவரும், பெண் ஒருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தை அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் அபு பாக்கார் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருவரின் அடையாளம் மற்றும் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.
மேலதிக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.








