பிடிபிடிஎன் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நிலுவை வைத்துள்ளவர்கள், அதனைச் சீரமைக்க மொத்த நிலுவைத் தொகையில் 20 விழுக்காடு அல்லது குறைந்தபட்சம் 1,000 ரிங்கிட் செலுத்தும் வாய்ப்பை பிடிபிடிஎன் வழங்குகிறது.
இந்தச் சலுகை நவம்பர் 1 முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறும் 2026 கடனாளிகள் நட்புறவு மாதத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு, கடன்களை ஒன்றிணைத்தல் மற்றும் உஜ்ரா (ujrah) முறைக்கு மாற்றுதல் ஆகியவற்றுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கடன் பெற்றவர்கள் தங்களின் நிதி வசதிக்கு ஏற்ப திருப்பிச் செலுத்தும் திட்டத்தைப் பெற பிடிபிடிஎன் அலுவலகங்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு www.ptptn.gov.my என்ற இணையதளத்தை நாடலாம்.








