Nov 17, 2026
Thisaigal NewsYouTube

சைபர் மிரட்டல், பகடிவதை விவகாரம்; சமூக ஊடகத் தளங்களுடன் மீண்டும் பேச்சு நடத்தும் அரசாங்கம்! டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி கூறுகிறார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சைபர் மிரட்டல், பகடிவதை  விவகாரம்; சமூக ஊடகத் தளங்களுடன் மீண்டும் பேச்சு நடத்தும் அரசாங்கம்! டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி கூறுகிறார்

காஜாங், செமினி, பெரானாங்கைச் சேர்ந்த இந்தியத் தம்பதியர் சைபர் மிரட்டல் மற்றும் பகடிவதை காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தளங்களுடன் அரசாங்கம் மீண்டும் பேச்சு நடத்தவுள்ளது.

வரும் டிசம்பர் மத்தியில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சில் சைபர் மிரட்டல் மற்றும் பகடிவதையைத் தடுப்பது குறித்து விவாதிக்கப்படும் என தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நேரலை ஒளிபரப்புகளின்போதும் சமூக ஊடக நிறுவனங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவை மட்டும் நம்பியிருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

பீனிக்ஸ் பிக்ஸல்ஸ் (Phoenix Pixels) புகைப்பட நிறுவனத்தை நடத்தி வந்த அந்த இந்திய தம்பதியர், கடந்த வாரம், தங்கள் வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் சைபர் அச்சுறுத்தலுக்கும், பகடிவதைக்கும் ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதற்கிடையில், 2024 ஜனவரி முதல் கடந்த அக்டோபர் வரை 13,883 போலி டிஜிட்டல் காணொளிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு தவறாகப் பயன்படுத்தப்பட்ட 61 சம்பவங்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் டத்தோ ஸ்ரீ ஃபாஸ்மி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மக்களவைக்குத் தலைமை தாங்கியபடியே விவாதம்; துணைத் தலைவரின் முடிவை மறுஆய்வு செய்யக் கோரி மனு

மக்களவைக்குத் தலைமை தாங்கியபடியே விவாதம்; துணைத் தலைவரின் முடிவை மறுஆய்வு செய்யக் கோரி மனு

பிடிபிடிஎன் கடன் நிலுவையைச் சீரமைக்க 20 விழுக்காடு அல்லது 1,000 ரிங்கிட் செலுத்தும் சலுகை

பிடிபிடிஎன் கடன் நிலுவையைச் சீரமைக்க 20 விழுக்காடு அல்லது 1,000 ரிங்கிட் செலுத்தும் சலுகை

இளவரசரின் பாதுகாவலர் எனப் போலி வேடம்; ஆடவருக்கு 2 ஆண்டு சிறை, 4 பிரம்படிகள்

இளவரசரின் பாதுகாவலர் எனப் போலி வேடம்; ஆடவருக்கு 2 ஆண்டு சிறை, 4 பிரம்படிகள்

இணைய மோசடியில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் இழப்பு: 3 ஆண்டுகளில் 6.95 பில்லியன் ரிங்கிட்டை இழந்த மலேசியர்கள்

இணைய மோசடியில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் இழப்பு: 3 ஆண்டுகளில் 6.95 பில்லியன் ரிங்கிட்டை இழந்த மலேசியர்கள்

நாடெங்கிலும் 1,643 மலைச்சரிவுகளில் நிலச்சரிவு அபாயம் -  பொதுப்பணித்துறை எச்சரிக்கை

நாடெங்கிலும் 1,643 மலைச்சரிவுகளில் நிலச்சரிவு அபாயம் - பொதுப்பணித்துறை எச்சரிக்கை

பிரான்ஸ் அதிபர் எம்மெனுவல் மெக்ரோனுக்கு டத்தாரான் மெர்டேக்காவில் அரசு மரியாதையுடன் கூடிய வரவேற்பு

பிரான்ஸ் அதிபர் எம்மெனுவல் மெக்ரோனுக்கு டத்தாரான் மெர்டேக்காவில் அரசு மரியாதையுடன் கூடிய வரவேற்பு