மலேசியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் இணைய மோசடிகளால் பொதுமக்கள் மொத்தம் 6.95 பில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 81 ஆயிரத்து 750 இணைய மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
2023-ஆம் ஆண்டு 1.22 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த பண இழப்பு, 2024-ஆம் ஆண்டு 1.57 பில்லியனாகவும், 2025-ஆம் ஆண்டில் அது 2.97 பில்லியனாகவும் அதிகரித்துள்ளது.
2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் மட்டும் பொதுமக்கள் 1.18 பில்லியன் ரிங்கிட்டை இணைய மோசடியில் இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், 2023-ஆம் ஆண்டு 34 ஆயிரத்து 495 மோசடி வழக்குகள் பதிவான நிலையில், 2024-ஆம் ஆண்டு 35 ஆயிரத்து 368ஆகவும், 2025-ஆம் ஆண்டு 66 ஆயிரத்து 204ஆகவும் அதிகரித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மேலும் 45 ஆயிரத்து 683 வழக்குகள் பதிவாகியுள்தாக சைஃபுடின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.








