Nov 17, 2026
Thisaigal NewsYouTube

கெடாவில் கடன் மிரட்டல்: வீட்டின் மீது சிவப்பு பெயிண்ட் வீசிய மர்ம நபர்கள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கெடாவில் கடன் மிரட்டல்: வீட்டின் மீது சிவப்பு பெயிண்ட் வீசிய மர்ம நபர்கள்

கெடா மாநிலம் கூலிம், தாமான் செபிலாய் பகுதியில் கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினையில், வீடொன்றின் நுழைவாயில் மற்றும் கார் மீது மர்ம நபர்கள் சிவப்பு நிற பெயிண்டை வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக 41 வயதுடைய தொழிற்சாலை ஊழியர் அலெக்ஸன்ரே டுமாஸ் அந்தோணிசாமி போலீஸில் புகார் அளித்துள்ளதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாம்சூல் பின் சின்ரிங் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மிரட்டல் கடிதத்தில், 'கேன்' என அழைக்கப்படும் நபரைத் தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தைத் தீர்க்காவிட்டால் வீட்டுக்குத் தீ வைக்கப்படும் என எச்சரிக்க விடுக்கப்பட்டிருப்பதாக அவர் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ ஆலோங் கடன் எதுவும் இல்லை என்றும், அண்டை வீட்டுக்காரருக்குப் பதிலாகத் தனது வீடு தவறுதலாகக் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகித்துள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படாத நிலையில், குற்றவியல் சட்டம் பிரிவு 427இன் கீழ் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இணைய மோசடியில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் இழப்பு: 3 ஆண்டுகளில் 6.95 பில்லியன் ரிங்கிட்டை இழந்த மலேசியர்கள்

இணைய மோசடியில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் இழப்பு: 3 ஆண்டுகளில் 6.95 பில்லியன் ரிங்கிட்டை இழந்த மலேசியர்கள்

நாடெங்கிலும் 1,643 மலைச்சரிவுகளில் நிலச்சரிவு அபாயம் -  பொதுப்பணித்துறை எச்சரிக்கை

நாடெங்கிலும் 1,643 மலைச்சரிவுகளில் நிலச்சரிவு அபாயம் - பொதுப்பணித்துறை எச்சரிக்கை

பிரான்ஸ் அதிபர் எம்மெனுவல் மெக்ரோனுக்கு டத்தாரான் மெர்டேக்காவில் அரசு மரியாதையுடன் கூடிய வரவேற்பு

பிரான்ஸ் அதிபர் எம்மெனுவல் மெக்ரோனுக்கு டத்தாரான் மெர்டேக்காவில் அரசு மரியாதையுடன் கூடிய வரவேற்பு

புக்கிட் பிந்தாங் பாலியல் தொழில் விவகாரத்தில் கடும் நடவடிக்கை - ஹன்னோ இயோ எச்சரிக்கை

புக்கிட் பிந்தாங் பாலியல் தொழில் விவகாரத்தில் கடும் நடவடிக்கை - ஹன்னோ இயோ எச்சரிக்கை

மாண்டிரி ஒருங்கிணைப்பாளர் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் – 37 அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

மாண்டிரி ஒருங்கிணைப்பாளர் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் – 37 அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

கேபிள் திருட்டால் இடிஎஸ் ரயில் தாமதம் – பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்க எம்பி கோரிக்கை

கேபிள் திருட்டால் இடிஎஸ் ரயில் தாமதம் – பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்க எம்பி கோரிக்கை