Nov 16, 2026
Thisaigal NewsYouTube

மாண்டிரி ஒருங்கிணைப்பாளர் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் – 37 அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாண்டிரி ஒருங்கிணைப்பாளர் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் – 37 அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

மாண்டிரி (Mandiri) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹம்டின் நோர்டின் மீதான வெளிநாட்டுப் பயணத் தடையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என 37 அரசு சாரா அமைப்புகளைக் கொண்ட செக்ரடெரியட் ஹிம்புன் கோரிக்கை விடுத்துள்ளது.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் முன்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது.

அதில், முன்கூட்டிய அறிவிப்பின்றி பயணத் தடை விதிக்கப்பட்டதற்கான சட்ட அடிப்படை மற்றும் காரணங்கள் குறித்து அரசாங்கம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், தேச நிந்தனைச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு உடனடி தற்காலிகத் தடைவிதிக்க வேண்டும் என்றும், ஹம்டின் மீதான அச்சுறுத்தல் நோக்கிலான விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்ட ஹம்டின், நேற்று கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல முயன்றபோதே தனக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருப்பதை அறிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேபிள் திருட்டால் இடிஎஸ் ரயில் தாமதம் – பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்க எம்பி கோரிக்கை

கேபிள் திருட்டால் இடிஎஸ் ரயில் தாமதம் – பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்க எம்பி கோரிக்கை

கோலாலம்பூரில் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் – பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்க டிபிகேஎல்லுக்கு உத்தரவு

கோலாலம்பூரில் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் – பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்க டிபிகேஎல்லுக்கு உத்தரவு

இசிஆர்எல் ரயில் கட்டணச் சலுகையை பி40 மக்களுக்கும் விரிவுபடுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை

இசிஆர்எல் ரயில் கட்டணச் சலுகையை பி40 மக்களுக்கும் விரிவுபடுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தைக் கேலி செய்த துணை அமைச்சர் – பதவி விலக வேண்டும்

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தைக் கேலி செய்த துணை அமைச்சர் – பதவி விலக வேண்டும்

உள்ளூர் வழிகாட்டிச் செயலியான துஜுவுக்கு சில நாட்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள்

உள்ளூர் வழிகாட்டிச் செயலியான துஜுவுக்கு சில நாட்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள்

மலேசியா – சீனா இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதி – அன்வார், லீ கியாங் சந்திப்பில் இணக்கம்

மலேசியா – சீனா இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதி – அன்வார், லீ கியாங் சந்திப்பில் இணக்கம்