Nov 16, 2026
Thisaigal NewsYouTube

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தைக் கேலி செய்த துணை அமைச்சர் – பதவி விலக வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தைக் கேலி செய்த துணை அமைச்சர் – பதவி விலக வேண்டும்

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தைக் கேலி செய்யும் வகையில் கவிதை வடிவிலான சொல் நயத்தைப் பயன்படுத்திய துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் மஸ்லான், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்திற்குப் பதிலளித்த பொதுப்பணித் துறை துணை அமைச்சர் அஹ்மாட் மஸ்லான், டோல் சாவடி கட்டண ரத்து, பிடிபிடிஎன் கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை பாரிசான் நேஷனல் வழங்கவில்லை என்றும், அவற்றை வழங்குவதாக உறுதியளித்தவர்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதனால் நாடாளுமன்றத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரம்லி முஹமட் நோர், சர்ச்சைக்குரிய சொல்லைத் திரும்பப் பெறுமாறு அஹ்மாட்டுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமினுடின் ஹாருன், அமினொல்ஹூடா ஹசான், கூ பொயெ தியோங் மற்றும் சானி ஹம்ஸான் ஆகியோர், அரசாங்கத்தின் பொறுப்பில் இருக்கும் துணை அமைச்சர் இத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மாண்டிரி ஒருங்கிணைப்பாளர் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் – 37 அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

மாண்டிரி ஒருங்கிணைப்பாளர் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் – 37 அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

கேபிள் திருட்டால் இடிஎஸ் ரயில் தாமதம் – பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்க எம்பி கோரிக்கை

கேபிள் திருட்டால் இடிஎஸ் ரயில் தாமதம் – பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்க எம்பி கோரிக்கை

கோலாலம்பூரில் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் – பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்க டிபிகேஎல்லுக்கு உத்தரவு

கோலாலம்பூரில் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் – பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்க டிபிகேஎல்லுக்கு உத்தரவு

இசிஆர்எல் ரயில் கட்டணச் சலுகையை பி40 மக்களுக்கும் விரிவுபடுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை

இசிஆர்எல் ரயில் கட்டணச் சலுகையை பி40 மக்களுக்கும் விரிவுபடுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை

உள்ளூர் வழிகாட்டிச் செயலியான துஜுவுக்கு சில நாட்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள்

உள்ளூர் வழிகாட்டிச் செயலியான துஜுவுக்கு சில நாட்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள்

மலேசியா – சீனா இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதி – அன்வார், லீ கியாங் சந்திப்பில் இணக்கம்

மலேசியா – சீனா இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதி – அன்வார், லீ கியாங் சந்திப்பில் இணக்கம்