அரசு அதிகாரிகள் அலுவல் பணிகளுக்கு வேஸ் செயலியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலேசியாவின் உள்ளூர் வழிகாட்டிச் செயலியான துஜுவின் பயனர்கள் எண்ணிக்கை சில நாட்களிலேயே 10 லட்சத்தைக் கடந்துள்ளது.
துணைப் பொதுப்பணித்துறை அமைச்சர் அஹ்மாட் மஸ்லான் இதனைத் தெரிவித்தார்.
ஏழு மாதங்களில் சுமார் 2 லட்சமாக இருந்த பதிவிறக்கங்கள், திடீரென 8 லட்சமாக உயர்ந்து பின்னர் 10 லட்சத்தையும் கடந்ததாக அவர் கூறினார்.
எனினும், திடீர் பயனர்கள் அதிகரிப்பால் செயலியின் தொழில்நுட்பக் கட்டமைப்பில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், அதனைச் சரிசெய்ய மலேசிய நெடுஞ்சாலை ஆணையமும் துஜு செயலியை உருவாக்கிய நிறுவனமும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நவம்பர் 6ஆம் தேதி முதல் துஜு செயலியில் வழிகாட்டிச் சேவைக்காக கூகுள் மேப்ஸ் நேரடி இணைப்பு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.








