Nov 16, 2026
Thisaigal NewsYouTube

மலேசியா – சீனா இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதி – அன்வார், லீ கியாங் சந்திப்பில் இணக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியா – சீனா இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதி – அன்வார், லீ கியாங் சந்திப்பில் இணக்கம்

மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை பல்வேறு துறைகளில் விரிவுபடுத்த இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மணிலாவில் இன்று நடைபெற்ற 49ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டையொட்டி, சீனப் பிரதமர் லீ கியாங்குடனான சந்திப்பின்போது இந்த உறுதி மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

சீனாவின் ஹாங்ஸாவ், ஷாங்ஹாய் நகரங்களுக்கு அண்மையில் மேற்கொண்ட பயணத்தின்போது வழங்கப்பட்ட வரவேற்புக்கும் விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவித்த அன்வார், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், நவம்பர் 18, 19ஆம் தேதிகளில் ஷென்ஸென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் மலேசியா பங்கேற்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

சீன அதிபர் ஸி ஜின்பிங் தலைமையில் நடைபெறவுள்ள அந்த மாநாடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மாண்டிரி ஒருங்கிணைப்பாளர் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் – 37 அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

மாண்டிரி ஒருங்கிணைப்பாளர் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் – 37 அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

கேபிள் திருட்டால் இடிஎஸ் ரயில் தாமதம் – பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்க எம்பி கோரிக்கை

கேபிள் திருட்டால் இடிஎஸ் ரயில் தாமதம் – பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்க எம்பி கோரிக்கை

கோலாலம்பூரில் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் – பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்க டிபிகேஎல்லுக்கு உத்தரவு

கோலாலம்பூரில் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் – பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்க டிபிகேஎல்லுக்கு உத்தரவு

இசிஆர்எல் ரயில் கட்டணச் சலுகையை பி40 மக்களுக்கும் விரிவுபடுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை

இசிஆர்எல் ரயில் கட்டணச் சலுகையை பி40 மக்களுக்கும் விரிவுபடுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தைக் கேலி செய்த துணை அமைச்சர் – பதவி விலக வேண்டும்

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தைக் கேலி செய்த துணை அமைச்சர் – பதவி விலக வேண்டும்

உள்ளூர் வழிகாட்டிச் செயலியான துஜுவுக்கு சில நாட்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள்

உள்ளூர் வழிகாட்டிச் செயலியான துஜுவுக்கு சில நாட்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள்