Nov 17, 2026
Thisaigal NewsYouTube

இளவரசரின் பாதுகாவலர் எனப் போலி வேடம்; ஆடவருக்கு 2 ஆண்டு சிறை, 4 பிரம்படிகள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இளவரசரின் பாதுகாவலர் எனப் போலி வேடம்; ஆடவருக்கு 2 ஆண்டு சிறை, 4 பிரம்படிகள்

சிலாங்கூர் இளவரசரின் பாதுகாவலர் எனப் போலியாக நடித்து, சொத்து மற்றும் சொகுசுக் கார் வாங்கித் தருவதாகக் கூறி பெண் மருத்துவரிடம் ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரிங்கிட் மோசடி செய்த அல் ஸுல்ஃபட்லி அலியாஸ் என்பவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் நான்கு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

40 வயதான அவருக்கு, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நோர்மா இஸ்மாயில் இந்தத் தண்டனையை விதித்தார். நான்கு மோசடிக் குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டார்.

இதற்கிடையில், இந்த மோசடியில் தொடர்புடைய அவரது வருங்கால மனைவி நூருல் நூர் ஷாஹிரா கமாருடின் குற்றச்சாட்டை மறுத்து வழக்கை எதிர்கொள்கிறார்.

மற்றொரு நில மோசடி வழக்கிலும் அல் ஸுல்ஃபட்லிக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் இரண்டு பிரம்படிகளும் நேற்று விதிக்கப்பட்டன.

 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மக்களவைக்குத் தலைமை தாங்கியபடியே விவாதம்; துணைத் தலைவரின் முடிவை மறுஆய்வு செய்யக் கோரி மனு

மக்களவைக்குத் தலைமை தாங்கியபடியே விவாதம்; துணைத் தலைவரின் முடிவை மறுஆய்வு செய்யக் கோரி மனு

பிடிபிடிஎன் கடன் நிலுவையைச் சீரமைக்க 20 விழுக்காடு அல்லது 1,000 ரிங்கிட் செலுத்தும் சலுகை

பிடிபிடிஎன் கடன் நிலுவையைச் சீரமைக்க 20 விழுக்காடு அல்லது 1,000 ரிங்கிட் செலுத்தும் சலுகை

சைபர் மிரட்டல், பகடிவதை  விவகாரம்; சமூக ஊடகத் தளங்களுடன் மீண்டும் பேச்சு நடத்தும் அரசாங்கம்! டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி கூறுகிறார்

சைபர் மிரட்டல், பகடிவதை விவகாரம்; சமூக ஊடகத் தளங்களுடன் மீண்டும் பேச்சு நடத்தும் அரசாங்கம்! டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி கூறுகிறார்

இணைய மோசடியில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் இழப்பு: 3 ஆண்டுகளில் 6.95 பில்லியன் ரிங்கிட்டை இழந்த மலேசியர்கள்

இணைய மோசடியில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் இழப்பு: 3 ஆண்டுகளில் 6.95 பில்லியன் ரிங்கிட்டை இழந்த மலேசியர்கள்

நாடெங்கிலும் 1,643 மலைச்சரிவுகளில் நிலச்சரிவு அபாயம் -  பொதுப்பணித்துறை எச்சரிக்கை

நாடெங்கிலும் 1,643 மலைச்சரிவுகளில் நிலச்சரிவு அபாயம் - பொதுப்பணித்துறை எச்சரிக்கை

பிரான்ஸ் அதிபர் எம்மெனுவல் மெக்ரோனுக்கு டத்தாரான் மெர்டேக்காவில் அரசு மரியாதையுடன் கூடிய வரவேற்பு

பிரான்ஸ் அதிபர் எம்மெனுவல் மெக்ரோனுக்கு டத்தாரான் மெர்டேக்காவில் அரசு மரியாதையுடன் கூடிய வரவேற்பு