பண்டார் ஸ்பிரிங்ஹீல் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு கடையின் முன் வாகனத்தை வழிமறைத்து கொண்டிருந்த ஆடவரைப் போலீசார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.
பசார் ரமலானிலிருந்து உணவுப் பொருட்களை வாங்கிவிட்டு வந்த பெண்மணி ஒருவர், தன்னுடைய வாகனத்தை மறைத்து நின்றுக் கொண்டிருக்கும், அந்த 38 வயது ஆடவரின் காரை நகர்த்துமாறு கேட்டுக் கொண்ட போது, போதையில் இருந்த அந்த ஆடவர் காரை நகர்த்தாமல் அந்த பெண்மணியிடம் தகாத வார்த்தைகளைப் பிரயோகம் செய்துள்ளார்.
அந்த ஆடவரின் செயல் குறித்து வலைத்தளங்களில் வெளியான 34 வினாடி காணொலி, பொது மக்களுக்குப் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக போட் டிக்சன் வட்டார போலீஸ் தலைவர் சுப்ரிண்டன் ஐடி ஷாம் முஹம்மட் தெரிவித்தார். மக்களின் கோபத்தைக் கிளறக்கூடிய இது போன்ற காணொலிகளைப் பொதுமக்கள் பகிர வேண்டாம் என்றும் பிரச்சனைகள் ஏற்பட்டால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்குமாறும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.








