பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் மருமகனை பிடிப்பதற்கு ஏதுவாக INTERPOL உதவியை நாடுவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடமிருந்து மேலும் சில விவரங்களை போலீஸ் துறை கோரியுள்ளது.
வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் முகைதீனின் மருமகன் 48 வயது முஹம்மது அட்லான் பெர்ஹான் னை ஆனைத்துலக போலீசாரின் ஒத்துழைப்புடன் பிடிப்பதற்கு சிவப்பு நோட்டீஸ் வெளியிடப்படுவதற்கு அந்த தகவல்கள் மிக முக்கியமானவையாகும் என்று போலீஸ் படைத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் தெரிவித்தார்.
தொழில் நிபுணத்துவம் சார்ந்த சில தகவல்கள் கோரப்படுகின்றன. அந்த தகவல்கள் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியை பிடிப்பதற்கு சிவப்பு நோட்டீஸ் அறிக்கையை வெளியிடுமாறு அனைத்துலக போலீசாரை அரச மலேசிய போலீஸ் படை கேட்டுக்கொள்ளும் என்று அயோப் கான் குறிப்பிட்டார்.
முகைதீன் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பதிவு, அவர்களை வேலைக்கு எடுத்தல், அவர்களின் Biometrik பதிவு முறையை பாதுகாத்தல் போன்ற குத்தகையை உள்துறை அமைச்சிடமிருந்து பெற்று கொடுப்பதற்கு ஒரு கோடி வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக கூறப்படும் முகைதீனின் மருமகனை விசாரணை செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அவரையும், அவரது வழக்கறிஞர் 69 வயது மன்சூர் சாத்ட்டையும் தற்போது தீவிரமாக தேடி வருகிறது.

Related News

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்


