Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பறிமுதல் செய்யப்பட்ட கடிகாரங்களை நிறுவனத்திடமே ஒப்படைக்க உத்தரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பறிமுதல் செய்யப்பட்ட கடிகாரங்களை நிறுவனத்திடமே ஒப்படைக்க உத்தரவு

கோலாலம்பூர், நவ. 25-


பிரபல கைக்கடிகார நிறுவனமான ஸ்வாட்ச்சி மிடருந்து பறிமுதல் செய்யப்பட்ட 172 கைக்கடிகாரங்களையும் அந்த நிறுவனத்திடமே ஒப்படைக்கும்படி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், உள்துறை அமைச்சுக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கைக்கடிகாரங்களையும், இன்று தொடங்கி 14 நாட்களுக்குள் ஸ்வாட்ச் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நீதிபதி அமர்ஜிட் சிங் ஆணைப்பிறப்பித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் பிரைட் கொலக்‌ஷன் வகை உட்பட விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், ஸ்வாட்ச் கடைகளிலிருந்து உள்துறை அமைச்சு பறிமுதல் செய்தது, சட்டத்திற்கு மீறிய செயலாகும் என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கோலாலம்ழூர் பவிலியன், சன்வே பிரமிட், மிட்வேலி மெகாமால், கடை மற்றும் சூரியா சபா ஆகிய ஸ்வாட்ச் கைக்கட்டிகாக கடைகளிலிருந்து 172 கைக்கடிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக வழக்கு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

சிறார்களை கொடுமைப்படுத்தி வந்ததாக சமூக இல்லங்களை நடத்தி வந்த எல்.ஜி.பி.டி. நிறுவனத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ரோக் பிரிட்டிஷ், கோல்பிளே ஆகிய தரப்பினருடன் ஸ்வாட்ச் நிறுவனம் செயல்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் வலைவாசிகள் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து ஸ்வாட்ச் கைக்கடிகார கடைகளிலிருந்து அந்த விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை உள்துறை அமைச்சு பறிமுதல் செய்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →