தொடர்ந்து 8 வருட காலமாக வெற்றிநடைப் போட்டுவரும் ஷாம்பவி ஆட்ஸ் அகடாமி இவ்வாண்டு தனது மூன்றாவது முறையாக ஷாம்பவி விருது விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
ஷாம்பவி ஆட்ஸ் அகடாமின் நிறுவரான ஹேமா ஷாமுவின் ஏற்பாட்டில் எதிர்வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி சனிக்கிழமை, மாலை 6 மணி அளவில் ஓடிட்டோரியம் தான் ஶ்ரீ கேஆர் சோமா விஸ்மா துன் சம்பந்தன், கோலாலம்பூரில் இவ்விருது வழங்கப்படவிருக்கிறது.
தமது நாட்டிய நடனத்தால் மக்களை கவர்ந்து கலைத்துறையில் சிறந்து விளங்கிய ஹேமா ஷாமு கடந்த 25 வருட காலமாக கலைத்துறையில் சாதித்து பல நாடுகளில் பல விருதுகள் பெற்றுள்ளார்.
கலைத் திறமை கொண்ட இவரின் தலைமையில் நடைபெறவிருக்கும் ஷாம்பவியின் விருது விழாவில், கலைத்துறையில் நீண்ட காலம் பயணித்து சாதனைப்புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்படுவதோடு, வளர்ந்து வரும் இளம் கலைஞர்களை மேலும் ஊக்குவித்து பலர் அறிய செய்திட வழிவகுத்திட செய்வதே இவ்விழாவின் முதன்மை நோக்கம் என ஏற்பாடு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 30 கலைஞர்களுக்கு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியில், மேலும் சிறப்பாக சேரும் வழியாக மனித நேய மாமனி ரத்தினவள்ளி அம்மாள் மற்றும் குரு ஶ்ரீ நாட்யா ஆச்சரியார் குரு ஶ்ரீ அனாந் மாஸ்தர் சிறப்பு வருகைப்புரிய விருக்கின்றனர்.
இவ்விருதில் கலந்து கொள்ளும் பார்வையாளர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை இலவசமாக உணவுகள் வழங்கப்படவிருப்பதால், இன்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 30 வெள்ளி செலுத்தி கலந்து கொள்ளலாம். நுழைவு சீட்டுகள் பெற விரும்புகின்றவர்கள் 019-348 8868 அல்லது 019 437 0000 தொலைபேசி எண்களின் வழி ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளலாம்








