Sep 27, 2026
Thisaigal NewsYouTube
டிக்டாக்கில் SPRM மற்றும் அசாம் பாக்கிக்கு எதிராக தவறான தகவல் வெளியிட்ட நபர் மீது விசாரணை
தற்போதைய செய்திகள்

டிக்டாக்கில் SPRM மற்றும் அசாம் பாக்கிக்கு எதிராக தவறான தகவல் வெளியிட்ட நபர் மீது விசாரணை

Share:

டிக்டாக் செயலி மூலம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மற்றும் அதன் தலைமை ஆணையர் அசாம் பாக்கி குறித்து தவறான தகவல் பதிவேற்றியதாக சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை SPRM வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணைக்கு உதவ அந்நபரை அழைத்து வாக்குமூலம் பதிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், அந்த உள்ளடக்கத்தை பதிவேற்ற பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு தொடர்பு சாதனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது

இந்த வழக்கானது, 1998ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் பிரிவு 233-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 5 லட்சம் ரிங்கிட் அபராதமோ அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம் என SPRM தெரிவித்துள்ளது.

Related News