கோத்தா பாரு, ஜனவரி.26-
தனது 3 வயது சொந்த மகளைக் கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 23 வயது தந்தை,கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
நீதிபதி சுல்கிஃப்லி அப்துல்லா முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை அந்த நபர் மறுத்தார். கடந்த ஜனவரி 14-ஆம் தேதி காலை சுமார் 7 மணியளவில், பாசீர் பூத்தே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனது மகளுக்குக் காயம் ஏற்படுத்தும் நோக்கில் அவரைக் கொலை செய்ய முயன்றதாக அந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் 307- ஆவர் பிரிவின் கீழ் அந்த நபருக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.








