Aug 9, 2026
Thisaigal NewsYouTube
அதிரடி நடவடிக்கை பயிற்சியின் போது மாணவர் காயமுற்றார்
தற்போதைய செய்திகள்

அதிரடி நடவடிக்கை பயிற்சியின் போது மாணவர் காயமுற்றார்

Share:

ஈப்போ, மார்ச்.17-

பொது கட்டடிங்களில் ஆபத்து, அவசர வேளைகளில் பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கையின் போது, கையாள வேண்டிய அணுகுமுறை தொடர்பான பயிற்சி, இன்று திங்கட்கிழமை ஈப்போ, உங்கு ஓமார், போலிடெக்னிக் கல்லூரியின் நடத்தப்பட்டது.

சிறப்பு நடவடிக்கை போலீஸ் பிரிவான கமாண்டோ 69 –வினால் நடத்தப்பட்ட இந்த அதிரடி பயிற்சியின் போது, உங்கு ஓமார், போலிடெக்னிக் கல்லூரியின் மாணவி ஒருவர் காயமுற்றார்.

பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கையின் போது, தங்களை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து அளிக்கப்பட்ட பயிற்சியின் போது, 22 வயதுடைய அந்த மாணவி கீழே விழுந்து காயமுற்றதுடன் காலில் சுளுக்கு ஏற்பட்டதாக உங்கு ஓமார், போலிடெக்னிக் கல்லூரி வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்ததது.

இச்சம்பவத்தின் போது சுகாதார அமைச்சின் பணியாளர்களும் தயார் நிலையில் இருந்ததால் அந்த மாணவிக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர் என்று அந்த கல்லூரி குறிப்பிட்டது.

அரச மலேசியப் போலீஸ் படை, ஈப்போ மாவட்ட கட்டுப்பாட்டு மையம், உங்கு ஓமார் போலிடெக்னிக் கல்லூரி , ஈப்போ பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனை ஆகியவை இந்தப் பயற்சியில் பங்கேற்றன.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து