Sep 15, 2026
Thisaigal NewsYouTube
போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்
தற்போதைய செய்திகள்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

Share:

சிரம்பான் மாநிலம் போர்ட் டிக்சனில் வாகனம் ஒன்று நாய் குட்டியை இருமுறை மோதிய சம்பவம் தொடர்பான விசாரணை கால்நடைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக லுகுட் போலீஸ் நிலையத்தில் புகார் பெறப்பட்டுள்ள நிலையில், நாய்குட்டி கொல்லப்பட்டது வேண்டுமென்றே நடந்தது அல்ல என்றும், அது விபத்து என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, லாயர்ஸ் ஃபோர் அனிமல் ரைட்ஸ் என்ற அமைப்பு இச்சம்பவம் குறித்து அவசர விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இச்சம்பவத்தை அலட்சியமாகவோ, துரதிர்ஷ்டவசமான விபத்தாகவோ ஒதுக்கி விடக்கூடாது என்று அக்குழுவின் பிரதிநிதி ராஜேஷ் நாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பற்ற நிலையில் இருந்த அந்த நாய்குட்டியை வாகனம் முதலில் மோதியதுடன், மீண்டும் அதே நாய்குட்டி மீது இரண்டாவது முறையாக மோதியிருப்பது கவலைக்குரியது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Related News