Aug 9, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு
தற்போதைய செய்திகள்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

Share:

முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்தும் வகையில், அவர்களுக்கு இரண்டாவது தொழில் வாய்ப்புகளை வழங்க தனியார் துறைகள் முன்வர வேண்டும் என பிரதமரின் மனைவியும், பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரச மலேசியக் கடற்படையின் முன்னாள் படைவீரர் சங்கம் ஏற்பாடு செய்த மை ஹீரோஸ் கோல்ஃப் சாம்யியன்ஷிப் கப் 2026 நிகழ்வில் உரையாற்றிய அவர், ஆயுதப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னரும், முன்னாள் ராணுவ வீரர்கள், சமூகத்திற்கும் நாட்டிற்கும் தொடர்ந்து பங்களிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், ‘கெம்பேன் தாபுங் பாஹ்லாவான்’ மற்றும் ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் விவகாரத் துறையான JHEV-இன் கீழ் செயல்படும் முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கங்களுக்கு அதிகமானோர் ஆதரவளிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

அதேவேளையில், வழங்கப்படும் ஒவ்வொரு தொகையும் நமது படை வீரர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்திற்காக நேரடியாக சென்றடையும் என்றும் வான் அஸிஸா உறுதியளித்துள்ளார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்