Aug 9, 2026
Thisaigal NewsYouTube
விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

Share:

இந்தோனேசியாவில் மலேசியா ஏர்லைன்ஸ் துணை விமானி போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள், பணிக்கு 1½ முதல் 2 மணி நேரம் முன்பாக வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சுற்றுலா, கலை மற்றும் கலாசார அமைச்சர் தியோங் கிங் சிங் வெளியிட்டுள்ள தகவலில், விமானப் பணியாளர்கள் பணிக்கு வருவதற்கு முன்பே போதைப்பொருள் உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்டு, அனுமதி பெற்ற பின்னரே பணியில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மலேசிய போக்குவரத்து துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள விமானியின் செயலை தனிநபர் ஒருவரின் பிரச்சினையாக மட்டும் கருதாமல், விமானப் போக்குவரத்து அமைப்பில் உள்ள குறைபாடுகளையும் ஆராய வேண்டும் என்றும் தியோங் கிங் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமமானது, மலேசியா ஏர்லைன்ஸின் 1,260 விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்