Sep 6, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

Share:

ஜோகூர் மாநிலத்தில் இன்று அதிகாலை 12 பொழுதுபோக்கு மையங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 209 வெளிநாட்டு பெண்கள் உட்பட 222 பேர் கைது செய்யப்பட்டனர்.

‘ஓப்ஸ் நோடா’ நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்கள் 19 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், இந்தோனேசியா, மியன்மார், பிலிப்பைன்ஸ் எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பொழுதுபோக்கு மையங்களின் 13 நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் 44 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும், 7 பேருக்கு ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹமான் அர்சாட் தெரிவித்துள்ளார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து