Sep 12, 2026
Thisaigal NewsYouTube
4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

Share:

நாட்டில் 4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்வதற்கான விரிவான சோதனை நடவடிக்கை தற்போது நடைபெற்று வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள தகவலில், உண்மையான அகதிகளையும், குடிநுழைவு அல்லது குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களையும் அடையாளம் காணும் வகையில் தற்போதைய தகவல் சேகரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அகதி அந்தஸ்து உறுதி செய்யப்படும் மியன்மார் நாட்டவர்கள், முதற்கட்டமாக சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கான நடவடிக்கையில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், தடுப்பு முகாம்களுக்கு வெளியே உள்ள மியன்மார் நாட்டவர்கள் தாமாக முன்வந்து பதிவு செய்து, தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய அணுகுமுறை ஒன்றையும் அரசாங்கம் உருவாக்கி வருவதாக சைஃபுடின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்