Apr 7, 2026
Thisaigal NewsYouTube
பூனையைச் சுவரில் வீசி சித்திரவதை: வேலையற்றவருக்கு 6 மாதச் சிறை
தற்போதைய செய்திகள்

பூனையைச் சுவரில் வீசி சித்திரவதை: வேலையற்றவருக்கு 6 மாதச் சிறை

Share:

காஜாங், சலவை நிலையம் ஒன்றில் பூனைக்குட்டியைச் சுவரில் வீசி சித்திரவதை செய்த 49 வயது வேலையற்ற நபரான தோ தெக் ஹூய் என்பவருக்கு, 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி அதிகாலை, கருப்பு நிற பூனைக்குட்டியைத் தரையிலும் சுவரிலும் தூக்கி வீசி அவர் சித்திரவதை செய்துள்ளார். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்திலும் அவர் பதிவேற்றியிருந்தார். விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் இன்று காஜாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

நீதிமன்றம் அவருக்கு 60,000 ரிங்கிட் அபராதம் விதித்த நிலையில், அதனைச் செலுத்த முடியாததால் அவர் கதறி அழுதார். இறுதியில் அபராதத்திற்குப் பதிலாக 6 மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பூனைக்குட்டி காலில் காயங்களுடன் மீட்கப்பட்டு கால்நடை மருத்துவத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

Related News