Oct 15, 2026
Thisaigal NewsYouTube

மூன்று நண்பர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:

தெலுக் இந்தான், ஜன.16-


கடந்த வாரம் கிட்டத்தட்ட 2 கிலோ எடைக் கொண்ட போதைப்பொருளை கடத்தியதாக மூன்று நண்பர்கள், தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

37 வயது முகமட் ஹபிஸ், 34 வயது முகமட் அலிப் சைடின் மற்றும் 27 வயது முகமட் அயிமான் என்ற அந்த மூன்று நண்பர்களும் மாஜிஸ்திரேட் நைடாதுல் அதிரா அஸ்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 6 ஆம் தேதி பிற்பகல் 2.50 மணியளவில் தெலுக் இந்தான், ஜாலான் சங்காட் ஜோங்கில் ஒரு பேரங்காடியின் முன்புறத்தில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் மூவரும் 1.918 கிலோ எடைக்கொண்ட மெத்தாம்ப்பதமின் வகையைச் சேர்ந்த போதைப்பொருளை கடத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்த மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை, ஈப்போ உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. இதனையொட்டி அவர்களிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →