Sep 23, 2026
Thisaigal NewsYouTube
ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்
தற்போதைய செய்திகள்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

Share:

ரவாங்கில் உள்ள ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலயத்தை இடித்துத் தள்ளும் நடவடிக்கைக்கு எதிராக நில உரிமையாளரான 'யாயாசான் குப்ரா' (Yayasan Kubra) அமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை மீண்டும் அமல்படுத்துவதற்கான மேல்முறையீட்டு மனுவை ஆலய நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நூரின் படாருடின் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு, இந்த மனுவைத் தள்ளுபடி செய்து, யாயாசான் குப்ரா அமைப்புக்கு 10 ஆயிரம் ரிங்கிட் நீதிமன்றச் செலவுத் தொகையாக வழங்குமாறு ஆலய நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

கடந்த மார்ச் 13-ஆம் தேதி செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 1995 முதல் செயல்பட்டு வரும் இந்த ஆலய நில விவகாரத்தில் சர்ச்சை நிலவுவதால் இடித்துத் தள்ளும் வேலைகளுக்குத் தற்காலிகத் தடை விதித்திருந்தது. எனினும், மார்ச் 31 அன்று உயர் நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கியது. இதனை எதிர்த்து ஆலய நிர்வாகத்தின் சார்பில் வழக்கறிஞர் அமாண்டா சோனியா மாத்யூ தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு அனுமதி மனுவே தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நில உரிமையாளருடன் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில், கடந்த பிப்ரவரியில் உரிய அனுமதியின்றி ஆலயத்தின் ஒரு பகுதியை இடிக்க முயன்ற நால்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்