Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தாபிஸ் பள்ளி விவகாரம், விசாரணை நடைபெற்று வருகிறது
தற்போதைய செய்திகள்

தாபிஸ் பள்ளி விவகாரம், விசாரணை நடைபெற்று வருகிறது

Share:

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தாபிஸ் சமயப் பள்ளி மையங்கள் மற்றும் தனியார் சமயப்பள்ளிகள் ​மூடப்பட்டுள்ளதாக கூறப்படும் அவ​தூறு தொடர்பான செய்தி தொடர்பில் போ​லீசார் ​தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்துள்ளார். இத்தகைய அவ​தூறுகளை பரப்பியுள்ள நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷாகேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து தற்போது இவ்விவகாரம் விரிவாக ஆராயப்பட்டு வருவதாக டத்தோ ஹுசெயின் ஓமார் குறிப்பிட்டுள்ளார். விசாரணை அறிக்கை பின்னர் புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News