Dec 23, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கில் நில வரிக்கான கட்டணத் தள்ளுபடி 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

பினாங்கில் நில வரிக்கான கட்டணத் தள்ளுபடி 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டது

Share:

ஜார்ஜ்டவுன், டிசம்பர்.23-

பினாங்கு மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு நில வரிக்கான கட்டணத் தள்ளுபடி 50 விழுக்காடாக உயர்த்தப்படுவதற்கு மாநில ஆட்சிக்குழு மன்றத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பு வழங்கப்பட்ட 32.5 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி 50 விழுக்காடாக உயர்த்தப்படுதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

நில உடமையாளர்களின் சிரமத்தைக் குறைக்கும் அதே வேளையில் புதிய நில வரி கட்டண விகிதம், கட்டடம் கட்டமாக ஒரு கட்டுப்பாட்டிற்குள் அமல்படுத்தப்படுவதை உறுதிச் செய்வதற்கு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.

தேசிய நிலச் சட்டத்தின் 828 பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள, புதிய விகிதங்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இருப்பினும், இந்த தள்ளுபடி குறைந்தபட்ச வாடகை விகிதங்களுக்கு உட்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

Related News