May 22, 2026
Thisaigal NewsYouTube
மேலும் இரு நபர்கள் படிபட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

மேலும் இரு நபர்கள் படிபட்டுள்ளனர்

Share:

கோலாலம்பூர், மே 11-

கடந்த வியாழக்கிழமை பின்னிரவு கோலாலம்பூர் மாநகரில் ஜாலான் யாப் குவான் செங் பகுதியில் வீற்றிருக்கும் கேளிக்கை மையம் ஒன்றில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மேலும் இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.

25 மற்றும் 28 வயதுடைய அந்த இரு நபர்கள் இன்று காலையில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

இந்த நாசவேலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இத்துடன் நான்காக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆகக் கடைசியாக பிடிபட்டுள்ள இந்த இரண்டு நபர்கள் வரும் செவ்வாய்க்கிழமை வரை தடுத்து வைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.

Related News