Jul 28, 2026
Thisaigal NewsYouTube
தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

Share:

புத்ராஜெயா, ஜூலை.28-

தேசிய கல்வி அமைப்பில் அறிவு மொழியாக மலாய் மொழியை வலுப்படுத்தும் முயற்சி தொடர்ந்து அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், மலேசியா உலகளவில் போட்டித்திறன் மிக்க நாடாக உருவெடுக்க மாணவர்கள் ஆங்கில மொழியிலும், பிற வெளிநாட்டு மொழிகளிலும் திறமை பெறுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை கல்வி அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அனைத்து மாணவர்களும் விதிவிலக்கின்றி மலாய் மொழியை அறிவு மொழியாக முழுமையாகக் கற்றறிவதை உறுதிசெய்யும் பொறுப்பை கல்வி அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் Fadhlina Sidek, துணை கல்வி அமைச்சர் Wong Kah Woh, அரசாங்க தலைமைச் செயலாளர் Tan Sri Shamsul Azri Abu Bakar மற்றும் பொது சேவைத் துறை தலைமை இயக்குநர் Tan Sri Wan Ahmad Dahlan Abdul Aziz ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், பிற மொழிகளைக் கற்பிக்கும் முயற்சி மலாய் மொழியின் முக்கியத்துவத்தை குறைக்கும் நடவடிக்கையாக அரசாங்கம் கருதவில்லை என்றும் அன்வார் விளக்கமளித்துள்ளார்.

தற்போதைய தேவைகள் மற்றும் உலகப் பொருளாதார முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, மாணவர்கள் மாண்டரின், தமிழ், அரபு, பிரெஞ்சு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

Related News