May 24, 2026
Thisaigal NewsYouTube
10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை
தற்போதைய செய்திகள்

10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை

Share:

சுங்கை சிப்புட்,ஆகஸ்ட் 18

விளையாட சென்று காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து, அச்சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு நிறைவடைந்த உடற்கூறு ஆய்வில், அச்சிறுமியின் கழுத்து பகுதியில் இறுக்கப்பட்டதற்கான காயங்களும், பிறப்பு உறுப்பில் தாக்கப்பட்டதற்கான காயங்களும் இருப்பது உருதிப்படுத்தப்படிருப்பதாக, சுங்கை சிப்புட் போலிஸ் தலைவர் சூப்பரின்ண்டன் முகமது கைஜாம் அஹ்மத் ஷஹாபுதீன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அச்சம்பவம் தொடர்பாக, இன்று மாலை 5.30 மணிக்கு பாதிக்கப்பட்டவருக்கு இரத்த தொடர்பு உறவு உள்ள 27 வயது ஆடவரைப் போலிஸ் கைது செய்துள்ளது.

Related News