Aug 12, 2026
Thisaigal NewsYouTube
பணத்தை மறைத்து வைப்பதில் துணைப் போனதாக விற்பனையாளர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பணத்தை மறைத்து வைப்பதில் துணைப் போனதாக விற்பனையாளர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், மே.28-

வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டைத் தனது வங்கிக் கணக்கில் பதுக்கி வைப்பதற்குத் துணைப் போனதாக விற்பனைப் பணியாளர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

25 வயதுடைய லோ சின் கியோங் என்ற அந்த விற்பனைப் பணியாளர் தாமான் ஶ்ரீ ஹர்தாமாஸில் 65 வயதுடைய நபருக்குத் துணைப் போனதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 424 ஆவது பிரிவின் கீழ் அந்த விற்பனைப் பணியாளர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News