மலேசியாவின் முதல் தலைமுறை பெண் எழுத்தாளர்களின் முன்னாள் பத்திரிக்கையாளர், கவிஞர், நூலாசிரியரான டத்தின் ஶ்ரீ சலெஹா அப்துல் ரஷிட் என்கிற சல்மி மஞ்சா நேற்று மதியம் காலமானார்.
தேசிய இலக்கியலாளரான டத்தோ ஶ்ரீ டாக்டர் எ. சமாட் சேயிட் - யின் மனைவியான சலெஹா வயது முதிர்வு காரணமாக சுபாங் ஜெயா - வில் உள்ள அவரது இல்லத்தில் இறந்ததாக டெவான் பஹாசா டான் புஸ்தாக்கா (DBP) முகநூலில் வெளியிட்டிருந்தது.
87 வயதுடைய சலெஹா-வின் படைப்புகள் பெண்ணியம், பெண்கள், இஸ்லாம் போன்ற பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துவதாக இருந்ததோடு நாட்டின் பழமை வாய்ந்த இலக்கிய அமைப்பான அங்காத்தான் சஸ்தெராவான் 1950 (ASAS 50) - விலும் உறுப்பினராக இருந்துள்ளார்.








