Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அது வருமான வரி வாரியத்தின் வேலையாகும்
தற்போதைய செய்திகள்

அது வருமான வரி வாரியத்தின் வேலையாகும்

Share:

கடந்த புதன்கிழமை கோலாலம்பூர், டாமன்சாராவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஹம்ஸா ஸைனுடீன் வீட்டில் நடத்தப்பட்ட திடீர் சோதனை, உள்நாட்டு வருவமான வரி வாரியத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பெரிக்காத்தான நேஷனல் கூட்டணியின் பொதுச் செயலாளருமான ஹம்ஸா ஸைனுடீன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் என்ற முறையில் தம்மிடம் உள்நாட்டு வருமான வரி வாரியம் தெரிவிக்கவில்லை என்று பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த முன்னாள் உள்துறை அமைச்சரின் வீடு முழுவதும் அலசப்பட்டது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் அது வருமான வரி வாரியத்தின் பணியாகும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

Related News