Jan 20, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

Share:

ஜோகூர் பாரு, ஜனவரி.20-

ஜோகூர் மாநிலத்தின் மனிதவள மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, மனித வள அமைச்சு 116.22 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது. ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி மற்றும் மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பிற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிதி ஜோகூர் திறனாளர் மேம்பாட்டு மன்றம் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் தெரிவித்தார்.

இந்த நிதி ஒதுக்கீட்டில், ஜோகூர் திறனாளர் மேம்பாட்டு மன்றத்துக்கான 20 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி, 61 மில்லியன் ரிங்கிட் TVET மாணவர்களுக்கான கடன் உதவி மற்றும் தொழில்துறை பயிற்சித் திட்டங்களுக்கான நிதி ஆகியவை அடங்கும்.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு , மின்சார வாகனங்கள் மற்றும் செமிகண்டக்டர் போன்ற அதிநவீன துறைகளில் உள்ளூர் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்த இத்திட்டம் இலக்கு வைத்துள்ளது.

இந்த முயற்சி ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு தேவையான தகுதியுள்ள பணியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜோகூர் மாநிலம் முதலீடுகளில் பெரும் வளர்ச்சியைப் பெற்று வருவதால், அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் போதுமான மற்றும் திறமையான மனித வளத்தை உறுதிச் செய்ய இந்த நிதி உதவும் என்று மந்திரி பெசார் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக, ஜோகூர் மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ், மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் அவரது துணை அமைச்சர் டத்தோ கைருல் ஃபிர்டாவுஸ் அக்பார் கான் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, ஜோகூர் மாநிலத்தின் திறனாளர் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து அவர்கள் விரிவாகக் கலந்தாலோசித்து ஒருங்கிணைப்பு செய்தனர்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி புகார்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஜேஎம் (IJM) நிறுவனத்தின் 2 உயர்மட்ட நிர்வாகிகள்

2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி புகார்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஜேஎம் (IJM) நிறுவனத்தின் 2 உயர்மட்ட நிர்வாகிகள்