கடநத் 2018 ஆம்ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 13 வயது ஒரு சிறுவன் உட்பட 913 இளம் வயதினர் பாலுறவு தொடர்பான நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார். பாலியல் உறவினால் ஏற்படும் பல்வேறு வகை நோய்களில் பாதிக்கப்பட்ட இளம் வயதினர் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சின் மூலமாக திரட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பாலுறவு நோயினால் 225 இளம் வயதினர் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற்ததில் காப்பார், பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி. ஹலிமா அலி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இதேபோன்று மாணவர்கள் பலர், சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர்கள் போதைப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்ற விவரமும் தெரியவந்துள்ளதாக ஃபட்லினா சிடெக் குறிப்பிட்டார்.








