கோலாலம்பூர், செப்டம்பர்.13-
அரசாங்கப் பொது பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்ப்பிற்கு தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையை உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் தற்காத்துப் பேசினார். அரசாங்க உயர்க்கல்விக் கூடங்கள் சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் நிரூபிக்கப்பட்ட சாதனைப் பதிவைக் கொண்டிருப்பதால் தற்போது உள்ள பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முறைகளைச் சர்ச்சை செய்யவோ, சவால் விடவோ வேண்டாம் என்று டாக்டர் ஸம்ரி அறிவுறுத்தியுள்ளார்.








