Jul 31, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் விளையாட்டாளர்கள் கவனத்தில் கொள்ளப்படுவர்
தற்போதைய செய்திகள்

முன்னாள் விளையாட்டாளர்கள் கவனத்தில் கொள்ளப்படுவர்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12-

நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதில் முன்னாள் தேசிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பங்களிப்பு நாடப்படும் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவ் தெரிவித்தார்.

முன்னாள் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் விலைமதிப்பில்லா பரந்த அனுபவத்தையும், திறனையும் தற்போதைய விளையாட்டாளர்களுக்கு பகிர்ந்து கொள்வதற்கு ஏதுவாக இவ்விவகாரத்தில் அமைச்சு அதீத கவனம் செலுத்தும் என்று ஹன்னா யோவ் குறிப்பிட்டார்.

அமைச்சர் என்ற முறையில் தமது தவணைக்காலம் முடிவடைதற்கு முன்னதாக விளையாட்டுத்துறையில் சரியான நபரை சரியான இடத்தில் நிறுத்தப்படுவது உறுதி செய்யப்படும். அதற்கு முன்னாள் வீரர்களும், வீராங்கனைகளும் உதவுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான Paris ஒலிம்பிக் போட்டியில் மலேசிய ஒலிம்பிக் குழுவிற்கு துணைத்தலைவாக தலைமையேற்ற SQUASH முன்னாள் தேசிய வீராங்கனைடத்தோ நிக்கோல் டேவிட்-டுடன் அதிக நேரம் செலவிட்டதையும் ஹன்னா யோவ் நினைவுகூர்ந்தார்.

தேசிய விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு உதவ டத்தோ நிக்கோல் டேவிட்- உறுதிப்பூண்டு இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை