Sep 6, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 70% அதிகரிப்பு - சட்டமன்றத்தில் தகவல்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 70% அதிகரிப்பு - சட்டமன்றத்தில் தகவல்

Share:

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் மாநிலத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநில சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நலக் குழுத் தலைவர் அன்ஃபால் சாரி கூறுகையில், 2021-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், குழந்தைகள் தொடர்பான 1,845 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவற்றில், 1,654 உடல் ரீதியான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 156 உடல்ரீதியற்ற பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 42 குழந்தைகள் ஆபாசப் படங்களை வைத்திருந்த வழக்குகளும், 24 ஆபாசப் படங்களை தயாரித்து அல்லது பரப்பிய வழக்குகளும் பதிவாகியுள்ளன என்றும் அன்ஃபால் சாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த அதிகரிப்பு கவலைக்குரியது என்றாலும், மக்கள் இது போன்ற குற்றங்களை அதிகாரிகளிடம் புகாரளிக்க முன்வரும் விழிப்புணர்வு அதிகரித்திருப்பதையும் இது காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு, பாதுகாப்பான தொடுதல் குறித்த கல்வி மற்றும் அவசர உதவிக்கான தொலைபேசி எண் 15999 பயன்பாடு தொடர்பான பல்வேறு திட்டங்களை மாநில அரசாங்கம் செயல்படுத்தி வருவதாகவும் அவர் விவரித்துள்ளார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து