Mar 26, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பேரரசருக்கு எதிராக அவதூறு கூற்றை வெளியிட்டது தவறு எனப் போலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

முன்னாள் பேரரசருக்கு எதிராக அவதூறு கூற்றை வெளியிட்டது தவறு எனப் போலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளது

Share:

கிளாந்தான்,ஆகஸ்ட் 18-

கிளாந்தான் நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் பேரரசருக்கு எதிராக அவதூறு கூற்றை வெளியிட்ட முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தான் நேஷனல் கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின் எதிராக ஜெலூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் போலிஸ் புகார் அளித்துள்ளார்.

முஹ்யித்தீன் யாசின், மலாய் ஆட்சியாளர்கள் குறிப்பாக பஹாங் சுல்தானை இழிவுப்படுத்தும் வகையிலும், அவருக்கு எதிராக மக்களை ஏவி விடும் வகையிலும் பேசியிருப்பது கண்டித்தக்க செயல் என்று ஆர்.எஸ்.என் ராயர் கூறினார்.

அதுமட்டுமின்றி, நாட்டின் பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ள முஹ்யித்தீன் யாசின் பேச்சு குறித்து, போலிஸ் தீவிரமாக விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் பேசிய அவர், மாமன்னரின் புனிதத்தன்மை, அதிகாரம், தனித்துவத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று குறிப்பிட்டார்.

15-வது பொது தேர்தலுக்குப் பிறகு, அரசாங்கத்தை அமைக்க தமக்கு போதிய ஆதரவு இருந்தும், அப்போதைய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா தம்மை ஆட்சியமைக்க அழைக்க மறுத்து விட்டதாக முஹ்யித்தீன் தமது தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய காணொலியும் போலிஸிடம் ஆதாரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முஹ்யித்தீன் யாசின் வெளியிட்ட அவதூறு கூற்று TIKTOK-கில் பரவலாகி மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு