May 14, 2026
Thisaigal NewsYouTube
எதிர்கட்சித் தலைவரை மாற்றும் கோரிக்கை: ஹம்சாவின் முடிவுக்குக் காத்திருப்பதாக சபாநாயகர் தகவல்
தற்போதைய செய்திகள்

எதிர்கட்சித் தலைவரை மாற்றும் கோரிக்கை: ஹம்சாவின் முடிவுக்குக் காத்திருப்பதாக சபாநாயகர் தகவல்

Share:

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் செய்யக் கோரி, எதிர்க்கட்சிக் கூட்டணி, தமக்கு அதிகாரப்பூர்வக் கடிதம் அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ஹம்சா ஜைனுதீன்னுக்கு நாடாளுமன்றம் தகவல் அனுப்பியிருந்தாலும் கூட, இதுவரை அவர் பதிலளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒருவரை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு உத்தரவிடும் அதிகாரம் தமக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ள ஜொஹாரி அப்துல், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிக் கூட்டணியே தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஒருவரை முடிவு செய்வது சபாநாயகரின் அதிகார வரம்பிற்குள் வராது என்றும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜொஹாரி அப்துல் குறிப்பிட்டுள்ளார்.

Related News